தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையில் நடைபெற்ற, சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 70ஆம் ஆண்டு விழாவில், சஸ்பென்ஸ், திரில்லர் படமான “பயம் உன்னை விடாது” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
சினிமா பத்திரிகையாளர் சங்க விழா:-
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 70ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை நகரில் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் பல திரையுலக நபர்கள் என பலர் பங்கேற்றனர்.
“பயம் உன்னை விடாது” பர்ஸ்ட் லுக்
இவ்விழாவில், கி.மு.இளஞ்செழியன் இயக்கிய “பயம் உன்னை விடாது” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இப்படத்தில், நடிகர் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், ஐஸ்வர்யா KS உடன் அருண்பிரசாத், விஜயகண்ணன், கணபதி கருணாநிதி, சித்ரா, கதிர்காமம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.கே. என்டர்டெயின்மெண்ட், ஜே ரோஸ் என்டர்டெயின்மெண்ட், & ராதா திரைக்கோணம் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது. இப்படத்திற்கு, ரத்தின தயாளன் இசையமைக்கிறார்.

இயக்குநரின் விளக்கம்:-
விழாவில், இயக்குநர் கி.மு. இளஞ்செழியன் பேசியதாவது, “தீபாவளி என்பது ஒளியின் திருநாள் — இருளையும் பயத்தையும் நீக்கும் நாள். அதுபோலவே ‘பயம் உன்னை விடாது’ மனித மனதில் இருக்கும் பயத்தை எதிர்கொள்ளும் ஒரு சின்னமாக உருவாகி வருகிறது” என்றார்.
மேலும், திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விழாவில் வெளியிடப்பட்டுள்ள படப் போஸ்டரில் “கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நல்லாசியுடன்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


