பிரியா கில்
நடிகை பிரியா கில் மாடல் அழகியாக களமிறங்கி பின் 1996ம் வருடம் ரிலீசான தேரி மேரா சப்னா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் .
அதன்பிறகு சில ஹிந்தி படங்கள் நடித்து வந்தவர் 2002ம் வருடம் தமிழில் அஜித் நடித்த ரெட் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் படு தோல்வியை கண்டது அதன் பிறகு அவர் தமிழ் பக்கம் வரவில்லை.
தமிழில் ஒரே ஒரு படம் நடித்த இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் 2006ம் வருடம் பைரவி என்ற படம் ரிலீசாகி இருந்தது.
அதன்பிறகு முழுவதுமாக இவரை சினிமா பக்கமே காணவில்லை.
திருமணம்
இவர் 2015ம் வருடம் திருமணம் செய்துகொண்டு டென்மார்க்கில் தங்கி விட்டார்.
தற்போது இவர் ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி கொண்டுள்ளாராம்.

நடிகை பிரியா கில்லின் சமீபத்திய புகைப்படம் வெளியாக அட ரெட் பட ஹீரோயினா இவர் என ரசிகர்கள் சமீபத்திய புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here