படத்தில் இருந்து விலக நினைத்த ரஜினிகாந்த்.. இயக்குநர் ஷங்கர் என்ன செய்தார் தெரியுமா?

0
159

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் கடந்த மாதம் ரிலீசாகி சக்கைப்போடு போட்டு நல்ல வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த், பாலசந்தர் மீது வைத்திருந்த அளவு கடந்த மரியாதையை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் என்ற பெயரை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது. அவருக்கு ரசிகர்களாக திரளானோர் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் இருக்கிறார்கள். முக்கியமாக சாதாரணமானவர்கள் மட்டுமில்லாமல் செலிபிரிட்டிகளும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள்தான். ஏனெனில் தனது தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ் மற்றும் நடிப்பு என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் அதகளம் செய்பவர். சினிமா துறைக்கு வருபவர்கள் எப்போதும் ரஜினிகாந்த்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டதுண்டு.

Rajinikanth Anthanan Shankar

வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக ஜெயிலர் படம் வெளியானது. ஜெயிலர் வெளிவரும் வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் ஆடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சிம்மாசனத்திலிருந்து ரஜினி இறக்கப்படுவார் என்றும் பலர் பேர் பேசினார்கள். ஆனால் ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி எப்போதும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களை பேச வைத்தது. ஆனால் அடுத்து அவர் நடித்த லால் சலாம் சற்று சறுக்கிவிட்டது. இப்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் ரஜினி.

கூலி: அந்தப் படம் அக்டோபரில் திரைக்கு வரவிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் இயக்குவதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இந்தப் படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் பிரமாண்டமான வெற்றி படத்தை கொடுத்தாரோ அதேபோல் கூலி படமும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வறுமையில் ரஜினிகாந்த்: இதற்கிடையே ரஜினிகாந்த் இப்போது உச்சபட்ச பணக்காரராகவும், பக்குவப்பட்ட மனிதராகவும் இருக்கிறார். ஆனால் அவரது தொடக்க காலம் வறுமையின் கொடுமையில் சிக்கியிருந்தது. கூலி வேலை, நடத்துநர் என்று ஏகப்பட்ட வேலைகளை செய்திருக்கிறார் ரஜினி. பிறகு சினிமாவுக்குள் நுழைந்து சூப்பர் ஸ்டார் ஆனார். உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தனது வறுமையை அவர் மறக்காததால்தான் அவர் அனைவரிடமும் சகஜமாகவும், எளிமையாகவும் பழகுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதுண்டு.

உடல்நல குறைவு: இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனையொட்டி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அப்போதிருந்து ரஜினிகாந்த்தின் உடல்நிலை மீது குடும்பத்தினரும்; அதேபோல அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளரும், இயக்கும் இயக்குநர்களும்அவர் மீது அதீத அக்கறை எடுத்துவருகின்றனர்.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின்போது நடந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் கொடுத்த ஒரு பேட்டியில், “2.0 படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த்தால் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதற்கான காரணம் அவரது உடல்நிலைதான். ஆனால் 20 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. அந்த சமயத்தில் 2.0 படத்திலிருந்து விலகிவிடலாம் என்று முடிவு செய்தார். அதேநேரம் அதுவரை தயாரிப்பு நிறுவனம் செய்த செலவுக்கான தொகையையும் கொடுத்துவிடுகிறேன் என்றும் கூறிவிட்டார். ஆனால் ஷங்கர் கதையில் சில மாற்றங்களை செய்து ரஜினிக்கு சிரமம் இல்லாதவகையில் காட்சிகளை வைத்து படமாக்கினார்” என்றார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here