நடந்து முடிந்த அமீர் மகள் திருமணம் : 3 முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு

0
56

மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இயக்குநர் அமீர் அவர்களின் மகள் திருமணத்தில் மூன்று முப்பெரும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று விழாவை அசர வைத்தனர்.

பாலா-வின் நண்பர்

இயக்குநர் பாலா அவர்களின் உதவி இயக்குநராக, நண்பராக இருந்த அமீர் அவர்கள் “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் தயாரித்து, இயக்கிய “ராம்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தேசிய விருது

இயக்குநர் அமீர் அவர்களுக்கு தேசிய விருதுகளை பெற்று தந்த படம் “பருத்திவீரன்”. இப்படம் 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் மூலம் பருத்திவீரன் அமீர் என்று மக்களால் சினிமா விமர்சகர்களால் அழைக்கப்பட்டார். இயக்குநர் அமீர் அவர்கள் இறுதியாக 

 ஜெயம் ரவியை வைத்து “ஆதி பகவான்” இன்னும் படத்தை இயக்கினார். அதன் பிறகு அவர் படம் இயக்கவில்லை.

இந்நிலையில், மதுரையை பூர்வீகமாக கொண்ட இயக்குநர் அமீர் தனது மகள் அனிநிஷாவின் திருமண விழாவை நேற்று மதுரை கருப்பாயூரணி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் எளிமையாக நடத்தினார். இந்த திருமணத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன், வெற்றிமாறன் மற்றும் பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.  மேலும் பிரபல முன்னால் ரவுடி வரிச்சூர் செல்வம் விழாவில் கலந்து கொண்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

 

அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய மூவரும் அமீர் அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு சந்தித்தது பரபரப்பாக தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here