விசிக எம்எல்ஏ பொண்டாட்டி-யை வம்பிழுந்த அந்த கவர்ச்சி குத்து விளக்கு நடிகை

0
207

தற்போது சென்னையில் பல்வேறு அதிக கனமழை பெய்து வருது. மக்கள் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்கள் உடமைகளை, கார்களை பாதுகாத்து வருகின்றனர். அதேசமயத்தில் பல்வேறு இடங்களில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மழைநீரை வடிய விடாமல் செய்துள்ளது. திமுக அரசின் செயல்பாடை சமூக வலைத்தளங்களில் பலர் விமரித்தும், பாராட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி அவர்களின் மனையும், சின்னத்திரை நடிகையுமான ஷர்மிளா சென்னையில் மழைநீர் தேங்க வில்லை என்றும், அனைவரும் மழையை ரசியுங்கள் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சினிமா கவர்ச்சி நடிகையும், பாஜக ஆதரவாளருமான நடிகை கஸ்தூரி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நடிகை ஷர்மிளா டிவிட்டரில் பதிவிட்டதாவது, “மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது. 

முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க, ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க.. நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு… சொன்னேன்” என்று கூறியுள்ளார். 

 இதற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்” என்று பதில் அளித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி மோதாத திமுக நிர்வாகியும், விசிக நிர்வாகியும் இல்ல என்று சொல்லும் அளவிற்கு பல அரசியல் பிரபலங்களுடன் மோதியுள்ளார். இதனால் துணிச்சலான கவர்ச்சி நடிகை என்றும் கஸ்தூரி பெயர் எடுத்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here