Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நான் நடித்துக் கொண்டு சாக வேண்டும் : பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அதிரடி பேச்சு

பாலிவுட் சினிமாவில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக மாஸ் குறையாத உச்ச நட்சத்திரம் என்றால் அது சாருக்கான் தான். சீரியல், விளம்பரம் என தொடங்கி திரைப்படங்களில்…

பாலிவுட் சினிமாவில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக மாஸ் குறையாத உச்ச நட்சத்திரம் என்றால் அது சாருக்கான் தான். சீரியல், விளம்பரம் என தொடங்கி திரைப்படங்களில் நடித்து, மெல்ல, மெல்ல வளர்ந்தவர் ஷாருக்கான். 

இன்று பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ளார்.  

ஒரு படத்திற்கு 100 கோடி வைக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார் மேலும் தனியார் திருமண நிகழ்ச்சிகளுக்கும் விழாக்களுக்கும் சென்று நடனம் ஆடுவதற்கும் கோடிகளில் பணம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். அப்படத்தை ஷாருக்கான் நிறுவனமே தயாரிக்கிறது.

Advertisements

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடந்த திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு அவரிடம், எப்போதும் நடித்துக்கொண்டிருப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஆமாம்.. சாகும் நாள் வரை நடிக்க வேண்டும். யாராவது ஆக்‌ஷன் சொல்ல வேண்டும். நான் சாக வேண்டும். ஆக்‌ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் எழுந்திருக்கக்கூடாது. இதுதான் எனது வாழ்நாள் கனவு. ஆம் நான் எப்போதும் நடிப்பதை விரும்புகிறேன்” என்றார்.

இரண்டு நிமிடம் உங்களை மகிழ்விக்க முடிந்தால் அது அன்பு. நான் ஒருவரை 50 வருடங்கள் அன்பு செய்ய முடிந்தால் அது ஒரு பொழுதுபோக்கு. நான் ஒருவரை 30 வினாடிகள் மகிழ்விக்க முடிந்தால், அது படைப்பாற்றல். எனவே ஒரே விஷயத்திற்கு வெவ்வேறு பெயர்களை நான் காண்கிறேன். மேலும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்கிறேன். ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக மக்களை ஒரே உணர்வுடன் மகிழ்விக்கச் செய்கிறேன்.” என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here