நடன நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் ரிஷி தேவாவை நடன புயல் பிரபுதேவா மேடையில் அனைவரின் முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனால் நடன இயக்குனர் பிரபுதேவா படத்தில் கதாநாயகன் வெடித்து உன்னை நீ நடிகராக உச்சம் பெற்றார் அவர் அடுத்தடுத்த நடித்த படங்களும் அடித்தன தமிழ் சினிமாவில் போக்கிரி என்ற படத்தில் மூலம் இயக்குனராக நடித்த பிரபுதேவா அவதாரம் எடுத்தார் ஒரு நடன இயக்குனராக கதாநாயகராக தமிழ் சினிமா இயக்குனராக தயாரிப்பாளராக என பல பரிணாமங்களிலும் வெற்றி பெற்றார் பிரபுதேவா.
இந்நிலையில், பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை
இதில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
“ரவுடி பேபி” பாடலுக்கு நடிகர் தனுஷும் , காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது.
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சியின் மேடையில் பிரபுதேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தன் மகனை அறிமுகப்படுத்தியது குறித்தும், அவரைத் தொடர்ந்து அவரின் மகனும் நடனத்தின் பக்கம் வருவது குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரபு தேவா.


அதில், “எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன். முதல் முறையாக இந்த மேடையில் நாங்கள் இதை பகிர்ந்துள்ளோம். இது நடனத்தையும் தாண்டிய ஒன்றாகும். மரபு, பேரார்வம் மற்றும் பயணம் தற்போது தொடங்கியிருக்கிறது” என பதிவிட்டிருக்கிறார்.”

தற்போது, இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மகனுக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பிரபுதேவா அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here