திரை உலகில் நடிகர் அஜித் அறிமுகம் ஆகி 32 வருடங்கள் நிறைவு ஆனாதை அடுத்து, லைகா நிறுவனம் தனது சோசியல் மீடியாவில் அஜித் பற்றி பெருமையாக செய்துள்ள பதிவு தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் கடந்த 1993 ஆம் வருடம் ’அமராவதி’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதும் இதனை அடுத்து திரையுலகில் அறிமுகம் ஆகி 32 வருடங்கள் நிறைவு பெற்றதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தை தயாரித்து வரும் Lyca நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு பதிவை பண்ணியுள்ளது. இந்த பதிவில் ’32 வருடங்கள் தீரா சாதனைகள் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ’விடாமுயற்சி’ படத்தின் அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக விஜய் திரைப்படத்தின் Update ஏதாவது ஒன்று வெளியானால் அதற்கு முந்தைய தினமோ அல்லது அடுத்த நாளோ அஜித் படத்தின் Update வெளியாகி வருவது கோலிவுட்டில் வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை விஜய்யின் ’கோட்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் பாடல் வெளியாக உள்ள நிலையில் அஜித்தின் 32 வருட கால சாதனை குறித்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இதனை அடுத்து அஜித்தின் 32 வருட கால சாதனைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here