இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், நடிகை திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கி உள்ள குட்-பேட் அக்லி படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக 20 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி ஒன்றை படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், உடனே ரசிகர்கள் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான “விடாமுயற்சி” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இருப்பினும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் படத்தின் வசூல் பெரிதும் பாதித்தது.

இந்நிலையில் இருவரின் நடிப்பில் உருவாகி உள்ள குட்-பேட் அக்னி படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் அவர்களுக்கு முந்திய படமான “மார்க் ஆண்டனி” படம் மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் படத்தின் டீசரை பார்ப்பதற்கு அஜித் ரசிகர்கள் பெரிதும் அவளுடன் இருக்கிறார்களாம்!..
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here