சிம்பு என்னும் மைல்கல் : ரசிகர்களை கொண்டாட வைக்கும் STR

0
82

தமிழ் சினிமாவில் சிம்பு ஒரு தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். தனது தந்தை டி.ராஜேந்தர் அவர்களால் உருவாக்கப்பட்டு, சினிமா கலைகள் கற்பிக்கப்பட்டாலும், பிறகு அவரே சுயமாக பல்வேறு சினிமா நுணுக்கங்களை கற்று தேர்ந்துள்ளார். 

“உறவை காத்தக் கிளி”, “மைதிலி என்னை காதலி” ஆகிய படங்களில் தலையை காட்டினாலும், தனது தந்தையின் அதிரடி பாணியில் சினிமா பிரபலங்களையே பிரமிக்க வைத்த படம் “எங்க வீட்டு வேலன்” படம் தான். இந்தப் படம் சிலம்பரசன் அவர்களுக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ மக்கள் விரும்பும் ஹீரோ கிடைத்து விட்டார் என்று புகழப்பட்டார். அதன் பிறகு தனது தந்தையின் இயக்கத்தில் தொடர்ந்து சபாஷ் பாபு, சம்சார சங்கீதம், வந்த பறவை உள்ளிட்ட படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

பின்னர், 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோ அறிமுகமாறினார். அன்று ஆரம்பித்த ஆட்டம், ஹீரோவாக, பாடகராக, பாடலாசிரியராக, நடனக் கலைஞராக, தயாரிப்பாளராக என பன்முக திறமையாளராக விளக்குகிறார் நடிகர் சிலம்பரசன். இன்றளவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் உடன். 

நடிகர் சிம்பு அவர்களுக்கு படம் வெளியாகிறதோ? இல்லையோ? ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்பு என்றும் குறையவே குறையாது. 

ஜல்லிக்கட்டு போராட்டம், காவேரி நதிநீர் போராட்டம் என பல மக்கள் பிரச்னைகளில் தலையிட்ட  இளைஞர்களுக்கு முன்மாதிரியாக நின்றவர் நடிகர் சிம்பு. அவர் என்றும் ரசிகர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார். அதே ரசிகர்களுக்கு எப்போது தேவையான நேரத்தில், தேவையான விசயங்களை பகிர்ந்து அவர்களை நல்வழிபடுத்துவார்.

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு, மது அருந்தும் பழக்கமும், புகைப் பிடிக்கும் பழக்கமும்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here