விசில் போடு பாடலில் கவனத்தை ஈர்த்து வருகிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்..

0
975

நடிகர் விஜய்யின் கோட் பாடத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வராங்க. இந்த படத்தோட ஷூட்டிங் ஹைதராபாத், கேரளா, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்குது.

இந்த நிலையில் தான் படத்தோட ரிலீஸ் தேதி அறிவிச்சுருக்காங்க பட குழு. செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் கோட் படம் வெளியாக இருக்குது. இன்று தமிழ் புத்தாண்டான சித்திரை ஒன்றாம் தேதி படத்தோட சிங்கிள் வெளியாக இருப்பதா போஸ்டர் வெளியிட்டு இருந்தாங்க. அதன்படியே இன்று விசில் போடு என்கின்ற பாடல் வெளியானது.

கோட் படத்தின் வில்லனாக மைக் மோகன் இணைந்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கு. 90ஸ் கிட்ஸ் ஓட ஃபேவரிட் ஆன ஹீரோன்னா அது பிரசாந்த் தான். சாக்லேட் பாயாக வலம் வந்தவர். நடிகர் பிரசாந்த் 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் மூலமா அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்தார்.

ஒரு காலத்தில் நடிகர் விஜய்க்கு போட்டியாக பார்க்கப்பட்ட நடிகர் தான் பிரசாந்த். ஆனால் தற்போது நடிகரின் விஜயுடன் பிரசாந்த் இணைந்து நடித்திருக்கிறார். இன்று வெளியான கோட் படத்தின் விசில் போடு பாடலில் கவனம் இருந்து வருகிறார் டாப் ஸ்டார் பிரசாந்த். பிரசாந்தை அப்பாடலில் பார்த்த ரசிகர்கள் நம்ம சாக்லேட் பாயா இது என்று ஷாக் ஆகியுள்ளனர். அவ்வளவு அழகாக இருக்கிறார் பிரசாந்த்.

மேலும் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான பிரசாந்த் படங்கள் போதிய வெற்றியை தரவில்லை. இருப்பினும் கோட் படத்தின் மூலம் தனது இரண்டாம் இன்னிங்ஸ் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here