பாலிவுட்டின் பிரபல நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் NTR-உடன் தேவரா படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர்.

‘தடக்’, ‘குஞ்சன் செக்சேனா’, ‘பாம்பே கேர்ள்’, ‘குட் லக் ஜெர்ரி’, போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
ஜான்வி கபூர் தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
வெளி நிகழ்ச்சிகளும் ஜான்வி கவர்ச்சியான உடைகளில் செல்வதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது முதன் முதலாக ‘தேவரா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

சில நாட்களுக்கு முன் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே ஹிட் அடித்தது. பாடலில் ஜான்வி கபூரின் நடனம் ரசிகர்களை கிறங்கடித்தது.
இந்நிலையில், தனது முதல் தென்னிந்திய படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின்படி, ஜூனியர் NTR-உடன் தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் ரூ. 5 கோடி சம்பளம் வங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்து தமிழ் படம் ஒன்றில் ஜான்வி கபூர் அவர்களை நடிக்க வைக்க மூத்த தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு ரூ.5 கோடிக்கும் மேல் ஜான்வி கபூர் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் அதற்கு கூடுதல் சம்பளம் வேண்டும் என்றும் ஜான்வி தரப்பு கேட்கிறார்களாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here