அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் – 2025 ஆம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், சிறந்த அனிமேஷன் படம், சிறந்த துணை நடிகர் என்று பல பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படத்திற்கான பிரிவில் பிரியங்கா சோப்ராவின் அனுஜா என்ற குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் வழக்கம் போல் போல் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்தமுறை பிரியங்கா சோப்ராவின் அனுஜா என்ற குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை.

மீண்டும் இந்த ஆண்டும் எந்த ஒரு பிரிவிலும் நேரடி இந்திய படங்களுக்கோ!… குறும்படங்களுக்கோ!.. ஆவணப் படங்களுக்கோ!.. எந்தவித விருதம் கிடைக்கவில்லை. இந்த முறை இந்தியர்கள் எந்த ஒரு விருதையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here