வேட்டையன் படத்திற்கு எதிராக போராடுவோம் : எச்சரிக்கை விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்

0
135

தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளையும், சர்ச்சைக்குரிய வசனங்களையும் நீக்க வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் கே் ராஜு கோரிக்கை வைத்துள்ளார். அப்படி அந்தக் காட்சிகளை படக்குழு நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் அந்த அதிமுக முன்னாள் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி என்னதான் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள், சர்ச்சைக்குரிய வசனங்கள் என்று பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்திநகர் அரசு பள்ளியில் ஒரு தவறு நடப்பதாக வசனங்களும், காட்சிகளும் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ளது் இதற்கு ஏற்கனவே சிலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் கே. ராஜா அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் இந்த காட்சிகளையும் சர்ச்சைக்குரிய வசனங்களையும் நீக்காவிட்டால் “வேட்டையன்” படத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அந்த முன்னாள் முன்னாள் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அரசு பள்ளிக்கு ஆதரவாக அவர் பேசியது தற்போது சர்ச்சையை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடப்பது திமுக ஆட்சி, தமிழகத்தில் அரசு பள்ளிகளை நடத்துவது திமுக அரசுதான். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் திமுக அரசு நடத்தும் அரசு பள்ளிக்கு ஆதரவாக பேசியிருப்பது மக்களிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here