பிக் பாஸ் சீசன்-8 போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு : இவர்களை வைத்து என்ன செய்ய முடியும் :-
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி. இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு இந்திய மொழிகளில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகறது. அந்தந்த மாநில சினிமா சூப்பர் ஸ்டார்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். தமிழகத்தில் பொறுத்தவரை விஜய் டி.வி இந்த நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறது.
உலக நாயகன் கமலஹாசன் 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் தற்போது அரசியல் காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இடத்தை நிரப்புவதற்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம் பெற்றாலும் இறுதியில் தேர்பானது என்னவோ நடிகர் விஜய் சேதுபதி தான்.

தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது
விஷால் (பாக்கியலட்சுமி நடிகர்)
ஐஸ்வர்யா பாஸ்கரன்
TSK (காமெடியன்)
விடிவி கணேஷ்
கோகுல்நாத் (மானாட மயிலாட புகழ் டான்சர், நடிகர்)
பால் டப்பா (பாடகர்)
சௌந்தர்யா நஞ்சுண்டன் (நடிகை)
தர்ஷிகா (பொன்னி சீரியல் நடிகை)
தர்ஷா குப்தா (கவர்ச்சி நடிகை)
சுனிதா (குக் வித் கோமாளி காமெடியன்)
சஞ்சனா (மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர்)
அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)
அர்னவ் (செல்லம்மா சீரியல் ஹீரோ)
அன்பு (நடிகர் மயில்சாமி மகன்)
நடிகை ஐஸ்வர்யா
இந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அவ்வளவாக பிரபலமாகாதவர்கள். இவர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நாம் இந்த வாரம் விஜய் டிவி பார்க்கலாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here