பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் வெளியான 8 நாட்களில் உலகளவில் ரூ.85 கோடி வசூல் என தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன், மிஸ்கின் ஆகியோர் நடித்திருந்தனர்.


இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதுடன் மாபெரும் வசூல் சாதனையும் படைத்துள்ளது. முதல் நாளில் பல கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்ததாக தியேட்டர் உரிமையாளர்களும்; விநியோகஸ்தர்களும் பாராட்டினர்.


தற்போது, “டிராகன்” படம் வெளியாகி 8 நாட்கள் ஆகிறது. இந்த 8 நாட்களில் டிராகன் படம் உலக அளவில் 85 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை படைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ” டிராகன்” படம் ரூ.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் செல்லப் பிள்ளையாக இயக்குநரும், நடிகருமான பிரதிப் ரங்கநாதன் உள்ளது மற்றொரு சிறப்பாகும்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here