ஜெய்சங்கருக்கு பதிலடி கொடுத்த சிஐடி சகுந்தலா காலமானார்

0
96

ஆரம்பத்தில் நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நுழைந்தவர் சிஐடி சகுந்தலா. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.

சேலத்தைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் `சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்றார்.

பழம்பெரும் நடிகையான சகுந்தலா நடிகர் திலகம் சிவாஜி கணேஷ் அவர்களுடன் “பாரத விலாஸ், வசந்த மாளிகை” உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

80களில் தான் நடிக்கும் படங்களை குறைத்துக் கொண்ட சிஐடி சகுந்தலா 90களில் சினிமாவை விட்டு ஒதுங்கி கொண்டார். பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கிய சிஐடி சகுந்தலா சமீப காலமாக மொத்தமா சினிமா மற்றும் சீரியல்களில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். பெங்களூரில் தனது மகளுடன் வசித்து வந்த சிஐடி சகுந்தலா திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சிஐடி சகுந்தலா அவர்களுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here