நடிகர் ஸ்ரீக்கு உதவ முன் வந்த முன்னணி தயாரிப்பாளர் : எக்ஸ் தளத்தில் பதிவு

0
42

“ஸ்ரீயை தொடர்புகொள்ள உதவினால் மகிழ்ச்சி” என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வழக்கு எண் 18/ 9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீ. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு சில படங்களில் மட்டும் அவர் நடித்திருந்தாலும், ரசிகர்களால், இயக்குனர்கள்,, நடிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகர் ஸ்ரீ.

ஆனால் தற்போது பிரச்சனை என்னவென்றால் அவர் தொடர்பான வீடியோவும், புகைப்படமும் வெளியாகி சரச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ காட்சியில் அவர் உடல் மெலிந்து ஒல்லியாக மருத்துவமனைகளில் இருப்பது போல் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் திரைப் பிரபலங்கள் கூட இது பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சர்ச்சையை பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு,


“நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நாங்கள் என பல தரப்பினரும் நீண்ட காலமாக முயல்கிறோம்; இதற்கிடையே ஏராளமான யூகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது ஸ்ரீயை தொடர்புகொண்டு மீண்டும் அவரை நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கு, யாரேனும் எங்களுக்கு உதவினால் மிக்க மகிழ்ச்சி” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here