தனது 49வது படத்திற்கு சாய் அபயங்கர் இசை இசையமைக்க போகிறார் என்று நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


சாய் அபயங்கர் “கட்சி கட்சி சேர”, ” ஆச கூட” என மூன்று ஆல்பம் பாடல்களுக்கு இசை அமைத்து, பாடி வெளியிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் சாய் அபயங்கரின் பாடல்களை கொண்டாடி வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது.
ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்க உள்ளார் சாய் அபயங்கர்.
இந்த வரிசையில் நடிகர் சிலம்பரசன் தற்போது அவரது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை வட இந்தியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொடங்கவுள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்திற்கு இசையமைக்க சாய் அபியன்கர் இணைந்துள்ளார் என நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here