டிராகன் படத்தில் இடம்பெறற “வழித்துணையே…” பாடலின் வீடியோவை படக்குழு யூடிப்பில் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் 150 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக “வழித்துணையே” மற்றும் “ஏன் டி விட்டுப் போன….!” பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வழித்துணையே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here