கர்நாடகாவின் மண்டியாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரசி கனிகா, நடிகை ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு:
நேற்று அவர் அளித்த பேட்டியில், பெங்களூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அவர் சம்மதிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
தனக்கு ஒரு தொழிலைக் கொடுத்த துறையை மதிக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக துறை மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் இங்கே நடக்கும் விழாவிற்கு வர மறுத்தது கண்டனத்திற்கு உரியது.
அவர் கன்னடத் திரையுலகத்தையும், கன்னட மொழியையும் அவமரியாதை செய்கிறார். நாம் அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டாமா? என காட்டமாக பேசியுள்ளார்.



கவர்ச்சி புயல் ராஷ்மிகா:
முதலில் கன்னடத்தில் திரை உலகில் அறிமுகமாகி அறிமுகமாகி, பிறகு தெலுங்கு திரை உலகில் உச்சம் பெற்றார். தெலுங்குவில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்தார்.

தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து “வாரிசு” படத்தில் நடித்தார். பிறகு “அனிமெல்” என்ற இந்தி படத்தின் மூலம் பான் ஸ்டார் நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.
ஆனால் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தன்னா மீது காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு முன்வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here