எதிர்நீச்சல்
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு சீரியல் குறித்த தகவல் அதிகம் வந்து கொண்டு இருக்கிறது.
அது என்ன சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.

அதிகாரப்பூர்வமாக செய்தி வரவில்லை என்றாலும் அதில் நடித்தவர்கள் சிலர் பதிவு செய்வதன் மூலம் சீரியல் முடிவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் கிளைமேக்ஸ் எப்படி அமைய போகிறது என்பதை மட்டும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறார்கள்.
குட் நியூஸ்
எதிர்நீச்சல் சீரியல் ஜுன் மாதம் முடிவடைவதாக சொல்லக்கூடிய நிலையில் இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது வரும் ஜுன் 10ம் தேதி திருச்செல்வம் வீட்டில் விசேஷம் நடக்கிறது என்கின்றனர்.

திருச்செல்வம் அவர்களின் மகள் பிரியதர்ஷினிக்கு ஜுன் 10ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் திருச்செல்வம் மகளுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here