காஞ்சனா 4
ராகவா லாரன்ஸ் என்றால் நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை எல்லா திரைப்படங்களும் மெகா ஹிட்டாகியுள்ளது.

காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் முடிவுலேயே ராகவா லாரன்ஸ் சொல்லியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
சமீபத்தில் ரிலீசான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தற்போது காஞ்சனா 4 குறித்த பேச்சு தமிழ் திரை பகுதியில் பேசப்பட்டு வருகிறது.
இவர் தான் ஹீரோயினா?
இந்த நிலையில், காஞ்சனா 4 திரைப்படத்தில் நடிகை மிருணால் தாகூரை ஹீரோயினியாக நடிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் ஹீரோயின்களை தேர்வு செய்யும் ராகவா லாரன்ஸ், ரசிகர்களின் இந்த கோரிக்கையை ஏற்று கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here