பெங்களூரை சேர்ந்த மோகன் பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால், அவர் இந்த படத்தின் கதாநாயகன் இல்லை. இப்படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். சென்னையில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய கன்னட திரைப்படம் இதுதான். அதன் பிறகு அதே பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி திரைப்படத்தில் நடித்தார் மோகன்.
அதனை அடுத்து மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களின் வெற்றி கோலிவுட்டில் மோகனுக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்தது. மோகன் நடித்த பல படங்கள் வெள்ளி விழா படங்களாக அமைந்தது. ஒருபக்கம் ரஜினி, கமல் படங்கள் பல நாட்கள் ஓடினாலும், அதே போல மோகனின் படங்களும் பல நாட்கள் ஓடியது.

மோகன் ஒரு சமயத்தில் சினிமாவிலிருந்து விலகினார். 1999 வரை தொடர்ந்து நடித்து வந்த மோகன் அதன்பின் நடிப்பதை நிறுத்தி கொண்டார். அவர் கடைசியாக சுட்ட பழம் என்கிற படத்தில் நடித்தார். இது 2008ம் ஆண்டு வெளியானது. இப்போது 25 ஆண்டுகள் கழித்து ஹரா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும், மோகன், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். மோகன் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பதால் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அதில், பல தகவல்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக முதன் முதலில் கோகிலா படத்தில் நடித்ததை பற்றிய பல அனுபவங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
அந்த படத்தில் சில தினங்கள் நடித்துவிட்டு வேறொரு படத்தில் நடிக்க சென்று விட்டேன். எனக்கு என்னுடைய காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதே தெரியாது. அதுவும் கமல் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகள். எனக்காக அவரும் காத்திருந்தார். நான் 3 நாட்கள் போகவில்லை. அதன் பின் எனக்கு தந்தி கொடுத்து என்னை வரவழைத்தார்கள்.
ஷூட்டிங் பகுதிக்கு போனதும் பாலுமகேந்திரா என்னிடம் பேசவே இல்லை. என்னை தனியாக கூப்பிட்ட கமல் ‘நன்றாக நடிக்கிறாய். ஏன் இப்படி செய்கிறாய்?’ என கேட்டார். ‘எனக்கு தெரியாது சார். யாரும் என்னிடம் சொல்லவில்லை’ என்றேன். எப்போது வரவேண்டும் என நீ போய் கேள். கையில் ஒரு டைரி வைத்துக்கொள். எப்போது எந்த திரைப்படத்தில் நடிக்கிறோம் என குறித்து வைத்துக்கொள்’ என அறிவுரை கூறினார். அதன்பின் நான் எந்த படத்திற்கும் கால்ஷீட்டில் சொதப்பியதே இல்லை’ என மோகன் தெரிவித்திருந்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here