மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
விக்ரம் பெயரை நீக்கிய துருவ்
வித்தியாசமான லுக்கில் துருவ் அந்த போஸ்டரில் காட்டப்பட்டு இருக்கிறார். மேலும் துருவ் விக்ரம் என்ற பெயரில் விக்ரம் பெயரையும் நீக்கி இருக்கிறார்கள்.
துருவ் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருப்பது ஏன்? என சிலர் கேள்வியும் எழுப்பி இருக்கின்றனர்.
வெற்றி பெறுவது அவசியம்:-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓ.டி.டி-யில் வெளியான “மகான்” திரைப்படம் தவிர நடிகர் துருவ் விக்ரம் அவர்களுக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை.
நடிகர் விக்ரம் அவர்களின் மகன் நடிகர் துருவ் விக்ரம் என்ற பெயர் மட்டும் அவருக்குள்ளது. சிறந்த நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டிய பொறுப்பு தற்போது அவருக்கு உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுடன் இணைந்திருக்கும் நடிகர் துருவ் நல்ல படத்தை கொடுத்து வெற்றி கநாயகனாக வருவார் என்று சொல்லப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here