தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் மீனாவும் ஒருவர். இவர் ரஜினி, கமல் மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான இவர் அண்மை காலாமாக தமிழ் மற்றும் மலையாளம் போன் மொழிகளில் மட்டுமே நடித்து கொண்டிருகிறார். அதுவும் ஒரு சில கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

2009ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரை நடிகை மீனா கல்யாணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா எனும் ஒரு மகள்இருக்கிறார். மீனாவை தொடர்ந்து அவருடைய மகள் நைனிகாவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

விஜய்யின் தெறி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் வருடம் மீனாவின் கணவர் மரணமடைந்தார். இவருடைய மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர். இவர் பராசத்தி படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார் என்பதை எல்லோரும் அறிவோம்.

இந்த நிலையில், நடிகை மீனா நேற்று சிவாஜியின் நினைவு தினம் என்பதால் அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதில் சிறு வயதில் சிவாஜியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here