மகனுக்கு வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தத்தை முடித்த நெப்போலியன்.. தனுஷ் போட்ட பதிவு, வைரலாகும் புகைப்படம்

0
105

Nepoleon Son Engagement: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிகதாநாயகனாக சுமார் 70 படங்களில் நடித்து அசத்தியுள்ளவர் நெப்போலியன். அப்படி நடித்து வந்த போதே அரசியலில் ஆர்வம் செலுத்தி மத்திய அமைச்சராக பணியாற்றினார். அதன் பின் ஜெயசுதா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் பிறந்த ஒரு குழந்தைக்கு தசை சிதைவு நோய் உண்டானதால் அவரை திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை கொடுத்து வந்தார். பின்னர் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக மகனை அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணத்திற்கு அழைத்து சென்றார். அங்கே கூட்டிட்டு போன பிறகு அந்த இடம் மகனுக்கு மிகவும் பிடித்து போனதால் அவருக்காக அமெரிக்காவிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆனார்.

நெப்போலியன் மகனுக்காக செய்த விஷயம்

இந்த சூழ்நிலையில் அங்கு இருந்தவாறே அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வந்தார். அத்துடன் அமெரிக்காவிலேயே சொந்தமாக ஐடி கம்பெனி தொடங்கி திறமையாக அதை நடத்தி கொண்டு வருகிறார். அத்துடன் அமெரிக்காவில் பங்களா போல ஒரு வீட்டையும் வாங்கி குடும்பத்துடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளார்.

தற்போது இவருடைய மகன் தனுஷ் என்பவருக்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. அது குறித்து தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளது என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த நிச்சயதார்த்தம் பெண் குடும்பத்தார்கள் மற்றும் நெப்போலியன் குடும்பத்தினர்கள் ஒன்றினைத்து சந்திக்காமல் வீடியோ கால் வாயிலாக நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

இந்த ஒரு விஷயம் தான் தற்போது வைரலாகி பரவி வருகிறது. பொதுவாக நிச்சயதார்த்தம் என்றால் பெண் குடும்பத்தார்கள் மற்றும் மாப்பிள்ளை குடும்பத்தார்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடத்தும் ஒரு மகிழ்ச்சியான நேரம். ஆனால் தனுஷ் உடல்நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாததால் அவரை அழைத்து கொண்டு இங்கே வரமுடியாத சூழ்நிலையில் உள்ளதால் தான் நெப்போலியன் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் நடத்தி முடித்திருக்கிறார்.

பெண் குடும்பத்தினர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் நெப்போலினுக்கு சம்மந்தியாக உள்ள விவேகானந்தர் என்பவரின் மகளைதான் நெப்போலியன் அவருடைய மகன் தனுஷ்க்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறார். தற்போது இது பற்றி வெளியான வீடியோ மூலம் தனுஷ்க்கு, நெப்போலியன் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here