97வது ஆஸ்கர் விருது விழா : விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ!…

0
153

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் – 2025 ஆம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், சிறந்த அனிமேஷன் படம், சிறந்த துணை நடிகர் என்று பல பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டது.

97 – வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் வென்ற திரைப்படங்களின் முழுப் பட்டியல்:

சிறந்த நடிகர் – ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த நடிகை – மிகே மேடிசன் (அனோரா)

சிறந்த திரைப்படம்  –  அனோரா

சிறந்த இயக்குநர் – சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த திரைக்கதை – சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த படத்தொகுப்பு –  சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த ஒளிப்பதிவு – லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த துணை நடிகர் – கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)

சிறந்த துணை நடிகை – சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)

சிறந்த பாடல் – எல் மால் (எமிலியா பெரெஸ்)

சிறந்த பிண்ணனி இசை – டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்

சிறந்த ஆவணக் குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா

சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)

சிறந்த அனிமேசன் திரைப்படம் – ஃப்ளோ

சிறந்த அனிமேசன் குறும்படம்  – இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்கட்

சிறந்த ஒலி வடிவமைப்பு – ட்யூன் 2

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ட்யூன் 2

சிறந்த திரைக்கதை (தழுவல்)  – பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)

சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) – ஐயம் நாட் எ ரோபாட்

சிறந்த ஒப்பனை – தி சப்ஸ்டன்ஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல் (விக்கட்).

இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு படத்திற்கு இயக்குநர் வென்ற அதிகபட்ச விருதுகளாகும்.

இதற்கு அடுத்ததாக, தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம் 5 விருதுகளையும்; ட்யூன்-2, எமிலியா பெரேஸ், விக்கட் ஆகிய படங்கள் தலா 2 விருதுகளையும் வென்றுள்ளன.

இந்தமுறை இந்தியர்கள் யாரும் ஆஸ்கர் விருது வெல்லவில்லை. இறுதியாக “RRR” படத்திற்கு இசையமைப்பாளர் மரகதமணியும், “நாட்டு”  பாடலுக்கு நடனம் அமைத்த இயக்குநரும்; இறுதியாக ஆஸ்கர் வருதை பெற்ற இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here