தயாரிப்பாளர் கே ராஜன் பாடகி சுசித்ரா விவகாரம் தொடர்பாக கொடுத்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சுசித்ரா-கார்த்திக் குமார் பற்றிய செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக விளங்குபவர் சுசித்ரா. கிட்டத்தட்ட 20 வ்ருடங்களுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக வலம் வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 வருடங்கள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள்.

பின் இருவருக்கும் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில வருடங்களாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி உள்ளிட்ட பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை உண்டாக்கி இருந்தார். இது குறித்து பல பேர்கள் விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா சொல்லியிருந்தார். இப்படி உள்ள நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணம் தந்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார்.
சுசித்ரா குறித்த சர்ச்சை:
கார்த்திக் குமாரும், தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் போவவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த அறைக்குள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி 2 ஆண்டுகளிலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது என்றெல்லாம் பேசி உள்ளார். இதற்கு கார்த்திக் குமாரும் பதிலடி கொடுத்து கொண்டு வருகிறார். இருந்தாலும், தொடர்ந்து சுசித்ரா அவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் அவர், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா ஆகிய பிரபல நடிகைகளைபற்றி பல சர்ச்சையான கருத்துக்களையும் கூறி உள்ளார்.

கே ராஜன் பேட்டி:
தற்போது சோசியல் மீடியாவில் சுசித்ரா பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இது சம்மந்தமாக பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கே ராஜன், சினிமாவிலும் இதுபோல சில தவறுகள் நடக்கிறதா என்று கேட்டால் நடக்கிறது. இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சினிமாவுக்குள் வரும் சில நடிகைகள் தவறான பாதைகளில் செல்கிறார்கள். இவைகள் எல்லாம் மறைமுகமாகத்தான் நடக்கிறது. ஆனால், இதை சுசித்ரா வெளிப்படையாக கூறுகிறார். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் நடிகைகளுடைய அந்தரங்க விஷயங்களை பற்றி பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
பயில்வான்-சுசித்ரா பற்றி சொன்னது:
இது தொடர்பாக கூட நான் கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்திருந்தேன். ஒரு தவறை பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் தான் செய்கிறார்கள். இதனை மறுக்கவே முடியாது. அதை ஏன் வெளியில் கொண்டு வர வேண்டும். இத்தனை வருடங்கள் இல்லாமல் சுசித்ரா இப்போது ஏன் இவ்வாறு பேசுகிறார். மீடியாவில் தன்னை குறித்து பேச வேண்டும் என்று செய்கிறாரா என்று புரியவில்லை.

நான் இந்த செயலை கண்டிக்கிறேன். பெண்கள் நலன் கருதி பாதுகாப்பு சட்டங்களை அரசு கடுமையாக கொண்டு வந்திருக்கிறது. என்னுடைய கேள்வி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை இப்போது ஏன் அவர் கூற வேண்டும்? ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காவல் துறையில் தாராளமாக புகார் அளிக்கக்கலாம். ஆனால், பொது வெளியில் கூறுவதற்கு காரணம் என்ன? சில பெண்கள் தரக்கூடிய தவறான தகவலால் தான் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
சினிமா குறித்து பேசியது:
உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக சினிமா உலகமும் உதவி செய்யும். நான் ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் இடம் பெண் சாபம் வேண்டாம் என்று கூறி இருந்தேன். சில நடிகைகளுக்கு என்ன கஷ்டமோ அவர்கள் தவறான பாதையில் போகிறார்கள். தவறு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். ஆனால், செய்த தப்பினை திருத்திக் கொள்ள வேண்டும். சினிமாவில் பார்ட்டிகள் நடப்பது எல்லாம் உண்மைதான். அதேபோல் நடிகர், நடிகைகளும் குடிப்பது உண்மை தான். அதை எல்லாம் ஏன் பேச வேண்டும். அதோடு சுசித்ரா கூறுவது போல போதைப்பொருள் விற்பனை செய்வதெல்லாம் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here