தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகஇருப்பவர் சமந்தா கடந்த 2017ஆம் வருடம் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். பல கோடி ரூபாய் செலவில் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நான்கு வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் வருடம் இருவரும் தங்களுடைய விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களுடைய பிரிவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்துக்கு பின்
விவாகரத்து சமயத்தில் நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து நடிகை சமந்தாவிற்கு ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதற்கு முன் வந்ததாகவும், நடிகை சமந்தா அதனை வாங்க மறுத்ததார் என்று செய்தி ஒன்று பரவியது.
இதனை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய சமந்தா, ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக சொன்ன ஒரு செய்தியை தூங்கி எழுந்த பிறகு பார்த்து வருத்தமடைந்ததாக கூறியுள்ளார். மேலும் எப்போது வருமான வரித்துறையினர் என்னிடம் வந்து கேட்டால் எதுவுமே இல்லை என அவர்களிடம் காட்டுவதற்காக காத்திருந்தேன் என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

இது பழைய செய்தியாக இருந்தாலும் தற்போது மீண்டும் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here