ஸ்ருதி ஹாசன்
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் சூர்யாவுடன் “7-ஆம் அறிவு” படத்தில் அறிமுகமானார். அப்படம் கொடுத்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் மற்றும் விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜுன் என பல நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென சிலகாலம் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். தனது பாடல் ஆர்வத்தினால் இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய அவர், சமீபத்தில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த “சலார்” படத்தில் நடித்திருந்தார்.

அதே போல, ஸ்ருதி ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த “இனிமேல்” ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் “கூலி” படத்திலும், கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் அடுத்த படமான “டாக்ஸிக்” படத்திலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
Mingle..?
ஸ்ருதி ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பருடன் பிரேக் அப் ஆனதை உறுதி செய்திருகிறார். இருவருமே இது குறித்து இலை மறைவு காய் மறைவாக பேசினார்.

இந்த நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஸ்ருதி ஹாசன், ரசிகர் ஒருவர், நீங்கள் Single-ஆ, Committed-ஆ என்ற வினா எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ருதி, நான் இப்போது சிங்களாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராகவும் இருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here