Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

முதல் ஆளாக உதவிய நடிகர் சிம்பு : பாராட்டிய தெலுங்கு திரையுலகம்

கேரளாவில் நிலசரிவு ஏற்பட்டு வயநாடு என்னும் ஊரே தொலைந்து போனது. அங்கிருந்த வீடுகளும் பலத்த சேதமடைந்தன. பல மக்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா…

கேரளாவில் நிலசரிவு ஏற்பட்டு வயநாடு என்னும் ஊரே தொலைந்து போனது. அங்கிருந்த வீடுகளும் பலத்த சேதமடைந்தன. பல மக்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் தலா 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள்.

அதே தமிழ் சினிமா நடிகர்களிலிருந்து முதல் உதவியாக சிம்பு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மற்ற எந்த தமிழ் நடிகரும் உதவுவதற்கு முன்பாகவே சிம்பு இந்த உதவியை இரண்டு வாரங்களுக்கு முன்பே தந்துவிட்டாராம்.

தொடர்ச்சியாக அங்கு படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் சில தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் சிம்பு தந்த உதவியை அங்குள்ள தெலுங்குத் திரையுலகினர் மனமார்ந்து பாராட்டியுள்ளனர்.  

Advertisements

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here