மீண்டும் வரும் சிம்புவின் ‘கெட்டவன்’ : மாஸாக அப்டேட் கொடுத்த STR

0
70

நடிகர் சிம்பு அவர்கநடிகர் சிம்பு அவர்களின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதனை தனது எக்ஸ் வலைத்தளத்தில் மாஸாக பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் படுஉ குஷியில் உள்ளனர்.

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு 47 வது படமாக வெளியானது .பத்து தல”. இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு அவர்களுக்கு நீண்ட காலமாக படம் எதுவும் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் சிம்புவின் அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

கடந்த சில ஆண்டுக்கு முன்பு, சிம்பு-வின் 48வது படமாக  தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே, இதற்கு இடையில் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்கும் “தக் லைஃப்” படத்திற்காக சிம்பு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்தநிலையில், தற்போது சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் படு குசியாக Instagram, Facebook, X தளம் என சமூக வலைத்தளங்களில் மாஸாக சிம்புவுக்கு ஆதரவாக போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

இந்தப் படத்திற்கு யார் இயக்குனர்? யார் இசையமைப்பாளர்? என்பது குறித்த தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here