சொந்தமாக தொழில்கள் செய்யும் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் விஜயா, என்னென்ன தொழில்கள் தெரியுமா?

0
108

ரசிகர்கள் இப்போதெல்லாம் அனைத்து விஷயத்திலும் சுவாரஸ்யம், விறுவிறுப்பு எதிர்ப்பார்க்கிறார்கள்.

அதிலும் தொடர்களில் சொல்லவே வேண்டாம், வில்லன்-வில்லி பல நாள் ஜெயிக்க கூடாது, ஒரு உண்மை நீண்ட நாள் வெளியே தெரியாமல் இருக்க கூடாது. அடுத்தடுத்து கதைக்களம் சுவாரஸ்யமாக மாற வேண்டும், முக்கியமாக விறுவிறுப்புடன் இருக்க வேண்டும்.

இப்படி பல விமர்சனங்களை சீரியல் பார்க்க கூடிய ரசிகர்கள் முன் வைக்கிறார்கள்.

அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நிறைய விஷயங்களை பூர்த்தி செய்து வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர்.

பிசினஸ்

இந்த சீரியலில் ரசிகர்கள் வெறுக்கும் ஒரு கதாபாத்திரமாக விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருகிறார் அனிலா. இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக உள்ள இவர் குடும்ப புகைப்படம், படப்பிடிப்பு தள புகைப்படம் என பதிவிட்டு இருப்பார்.

தற்போது அனிலா செய்யும் சொந்த தொழில்கள் பற்றிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். பரதநாட்டியம் பயிலும் நடன பள்ளியை வைத்திருக்கிறார்.

இதுதவிர நெட்டிப்பட்டம் செய்யும் தொழிலையும் பார்த்து வருகிறாராம். அந்த போடோக்களை அவரே இன்ஸ்டாவிலும் பதிவிட்டு வருகிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here