“என்னை இனி யாரும் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.”
தமிழ் சினிமாவில் பொதுவாக நடிகர்களுக்கு அடைமொழியுடன் கூடிய பெயர் படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களான நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் சிம்பு விஷால் சூர்யா என பலரும் இந்த அடைமொழியை முற்றிலும் தவிர்த்து விட்டார்கள் தற்போது நயன்தாரா அவர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


நடிகை நயன்தாராவின் ரசிகர்களும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வந்தனர் இது பல இடங்களில் சர்ச்சையாகவும் வெடித்தது தற்போது நடிகையின் நயன்தாரா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தண்ணீர் ரசிகர்கள் யாரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று அன்பு கட்டளை பிடித்துள்ளார் அந்த அறிக்கை பற்றி இங்கு பார்ப்போம்.



நடிகை நயன்தாராவின் அறிக்கை
என்னுடைய வாழ்க்கை எப்போதுமே திறந்த புத்தகமாக இருந்துள்ளது. தொடர்ந்து அளவற்ற அன்பும், பாசமும் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்துள்ளது. வெற்றியின் போது தோளில் தட்டிக் கொடுப்பது, கடினமான தருணங்களில் கை கொடுத்து தூக்கிவிடுவது என எனக்காக எப்போதுமே நீங்கள் இருந்துள்ளீர்கள். பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்துள்ளீர்கள்.
லேடி சூப்பர்ஸ்டார்” இது உங்களுடைய மகத்தான அன்பால் எனக்கு கிடைத்த பட்டம். மதிப்புமிக்க பட்டத்தை எனக்கு சூட்டியதற்காக உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். எனினும் பணிவுடன் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னை நயன்தாரா என்று அழைத்தாலே போதுமானது. இப்பெயர் எனது மனதுடன் நெருங்கி இருப்பதாக கருதுகிறேன். நடிகையாக மட்டுமின்றி தனிப்பட்ட நபராகவும் அப்பெயர் என்னை பிரதிபலிக்கிறது.
நயன்தாரா என அழையுங்கள்
பட்டங்களும், பாராட்டுகளும் விலைமதிப்பற்றவை. ஆனால் ஒரு சில சமயங்களில் அவை வேலை, கலை, நீங்கள் காட்டும் நிபந்தனையற்ற அன்பில் இருந்து நம்மை பிரித்துவிடுவது போன்ற தோற்றத்தை தருகிறது. ரசிகர்களாகிய நீங்களும் நானும் காதல் என்ற மொழியில் எல்லைகள் கடந்து எப்போதும் தொடர்பில் இருப்போம். நாம் எல்லோருக்கும் எதிர்காலம் கணிக்க முடியாததாக போகலாம். உங்களின் குறையாத ஆதரவு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய உழைப்பு உங்களை உற்சாகப்படுத்துவதில் மட்டுமே. சினிமா நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது. அதை தொடர்ந்து கொண்டாடுவோம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here