கரகாட்டக்காரன் படம் மக்கள் நாயகன் ராமராஜனின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்த படம் வருடக்கணக்கில் ஓடி பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பியது. இளையராஜாவின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே தரமானவை. கவுண்டமணியும், செந்திலும் காமெடியில் பட்டையைக் கிளப்பி இருப்பார்கள். நாம் ஜாலியாக இப்படி ஒரு படத்தை பார்த்திருக்கவே மாட்டோம். படம் முழுக்க பார்க்கும் போது நேரம் போவதே தெரியாது.
இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருமே நல்ல லாபத்தை பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் டைரக்டர் பாரதி கண்ணன். அவர் இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
இயக்குனர், பத்திரிகையாளர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக அவதாரம் எடுத்தவர் டைரக்டர் பாரதி கண்ணன். முதல் திரைப்படமே கரகாட்டக்காரன் திரைப்படத்துக்குத் தான் விநியோகஸ்தர் ஆனேன். ராமராஜனிடம் பத்திரிகையில் இன்டர்வியு செய்த பழக்கத்துல நண்பர் ஆனார்.

அவர் மிகவும் எளிமையா இருப்பார். பேசுவது, நடிக்கறதுன்னு. இபொழுதும் அப்படித்தான். நடிகர்கள்ல ஒரிஜினலா வாழ்ந்தது ராமராஜன் மட்டும்தான்னு நினைக்கிறேன். ‘கரகாட்டக்காரன் பாருங்க பாரதி’ன்னு சொன்னாரு. ‘டைட்டிலே நல்லாருக்க. வைரமுத்து எல்லாம் எனக்கு மிகவும் பிடிச்சது. 50 வாரம் ஓடிடும்.
மினிமம் 25 வாரம் ஓடிடும்’ என நான் சொல்றேன். ராமராஜன் படம் பார்த்துட்டு வெளியில் வந்தாரு. ‘பாரதி எப்படிருக்கு? சரியா சொல்லுங்க. நீங்க பத்திரிகைக்காரர்… சொல்லுங்க’ என்று சொன்னாரு. ‘சார் நீங்க நடிச்சதுலயே மிகவும் பிடிச்ச படம். லைப் டைம்ல ரெக்கார்டு பிரேக் படம்’னு நான் சொன்னேன்.
அந்த நம்பிக்கை எல்லாம் அவருக்கு இல்ல. ‘சும்மா சொல்லாதீங்க. 4 வாரம் போகும். மிஞ்சிப் போனா நான் இருப்பதால 5 வாரம் போகும்’னாரு. ‘அந்த தயாரிப்பாளரால எனக்கு சம்பளமே தர முடியல. எனக்கு மதுரை சிட்டி ஏரியாவ கொடுத்துருக்காங்க. மதுரை 5 ரூபா, சிட்டி 2 ரூபா 7 ரூபாக்குத் தான் நான் வாங்கிருக்கேன்’னாரு.
‘இல்ல இல்ல. இந்தப் படம் பெரிசா போகப்போகுது’ன்னு நான் சொன்னேன். அதுக்கு ‘நீங்க வேணும்னா சிட்டி 2 ரூபா தான. வாங்கிக்கோங்க’ன்னாரு. சென்னை ஏரியாவ 2 லட்ச ரூபாய்க்கு கொடுக்குறாரு. அப்போ எங்கிட்ட காசு இல்ல. நான் நண்பர்களிடம் கேட்டு கேட்டுப் பார்த்தேன். 70,000 ரூபா கிடைச்சது.
அப்பவும் ராமராஜன் அருமையான வார்த்தை சொன்னாரு. ‘பாரதி 70,000 ரூபான்னா பரவாயில்ல. மூன்று தியேட்டர் போட்டுருக்கோம். கொடுத்துட்டு நீங்க வச்சிக்கோங்க. அதுல வரும் காசு எல்லாம் உங்களுக்கு’ன்னாரு. இந்த டீலிங் நல்லாருக்கன்னு நான் ஒத்துக்கொண்டேன். நானும் நண்பரும் கஷ்டப்பட்டு கடனெல்லாம் வாங்கி 70.000 கொடுத்து வாங்கினோம். ரூ. 7 லட்சம் சம்பாதிச்சோம்.
நான் என்ன எதிர்பார்த்தேனோ அதையும் தாண்டுச்சுன்னே சொல்லலாம். அந்தப் பணத்தை வச்சிப் புதுவசந்தம் படத்தை வாங்கிட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here