வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி கோட்.
அடுத்த வாரம் வியாழன்கிழமை 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான தியேட்டர் முன்பதிவுகள் இன்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. ஆனால் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒரு டிக்கெட்டின் விலை 400 ரூபாய் கிட்ட விற்பனை செய்வதால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.

தற்போது ஒரு டிக்கெட்டின் விலை 400 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய உள்ளதால் நண்பர்களாக சேர்ந்து படத்தை பார்த்து ரசிக்க விரும்பிய ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர். அதேபோல குடும்பமாக சென்று “தி-கோட்” படத்தை பார்க்க நினைத்தவர்களும் சற்று தயக்கத்தில் உள்ளனர். இந்த திடீர் விலையேற்றம் எதற்கு என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்களும் தரப்பிலோ? படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ எந்த ஒரு விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

தி-கோட் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here