அம்மன் கதைகளில் நடிக்கும் முன்னணி ஹீரோயின்கள்!.. கோலிவுட்டில் மறுபடியும் துவங்கும் பக்தி சீரியஸ்!..

0
79

தமிழ் சினிமா வரலாற்றில் பத்தி படங்களுக்கு என்று ஒரு பெரிய பங்கு இருக்கிறது. சினிமா ஆரம்பித்த காலம் முதலே கடவுள் சம்பந்தமான படங்கள் அதிகம் வந்தது.வரலாற்று கதைகளுக்கு பின் பக்தி படங்கள் நிறைய வந்தது. அதன்பின் சமூக படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததும் பக்தி படங்கள் குறைந்து போனது.

ஆனால், திருவிளையாடல் போன்ற பக்தி படங்களில் சிவாஜி நடித்ததால் மறுபடியும் தமிழ் சினிமாவில் பக்தி திரைப்படங்கள் தலை தூக்கியது. பல முன்னணி நடிகர்களும் பக்தி திரைப்படங்களில் நடித்தார்கள். இதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான் அதிகமாக நடித்தார்.ஆனால், ஆதிபராசக்தி படத்தில் K.R.விஜயா நடித்து அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் அம்மன் படங்கள் வர ஆரம்பித்தது.

எனவே, பல கதாநாயகிகளும் அம்மன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். ரம்யா கிருஷ்ணன் நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற அம்மன் படம் தமிழில் டப் பண்ணப்பட்டு வெளியாகி கலெக்சனில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் அம்மனுக்கு கிராபிக்ஸ் எல்லாம் பண்ணப்பட்டது.

அதன்பின் மீனா, ரோஜா ஆகிய நடிகைகள் அம்மனாக நடித்தார்கள். கடைசியாக R.J.பாலாஜி நடிப்பில் ரிலீசான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, இப்போது மறுபடியும் அம்மன் திரைப்படங்கள் கோலிவுட்டின் பார்வை திரும்பியிருக்கிறது.

R.J.பாலாஜி மாசாணி அம்மன் என்னும் பெயரில் ஒரு அம்மன் படத்தை எடுக்க உள்ளார். இதில், அம்மனாக நடிகை திரிஷா நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா மறுபடியும் அம்மனாக நடிக்கவிருக்கிறார். வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.

அதேபோல், அருந்ததி, பாகுபலி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான அனுஷ்காவும் இப்போது மறுபடியும் ஒரு தமிழ் சினிமாவில் அம்மனாக நடிக்க உள்ளாறாராம். இது சம்மந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மொத்தத்தில் கோலிவுட்டில் மறுபடியும் பக்தி சீரியஸ் துவங்கி இருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here