Dhanush : தனுஷ் இப்போது நிற்பதற்கு கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக இருந்து வருகிறார். அவரே தன்னுடைய 50 வது படத்தை இயக்கிய நிலையில் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. ராயன் என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தில் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
அதுவும் S J சூர்யாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் இருக்கிறது. இந்நிலையில் தனது கனவு படமான புறநானூறு படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் சுதா கொங்கரா.

ஆனால் இப்போது தனுஷ் மிகவும் பிசியாக உள்ளதால் 2 ஆண்டுகள் மட்டும் காத்திருங்கள் நான் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உடனடியாக இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக வேறு நடிகரை தேர்வு செய்துள்ளார் சுதா கொங்கரா.
இளையராஜா பயோபிக்கால் மன கஷ்டத்தில் உள்ள தனுஷ்
புறநானூறு மாதிரி தனுஷின் அடுத்த கனவு படம் தான் இளையராஜாவின் பயோபிக். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இளையராஜாவின் பயோபிக் என்ற படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்போது FIRST PART எடுப்பதற்கு தனுஷ் இழுத்துக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் இளையராஜா மற்ற பணிகளில் பிஸியாக உள்ளதால் சென்னை வந்த பிறகு தான் ஃபர்ஸ்ட் பார்ட் ஆரம்பிக்க இருக்கிறார்கள். தனுஷ் தனது கால்ஷீட்டில் ரொம்ப இழுத்து பிடித்து கொண்டிருந்தாலும் இப்போதைக்கு எதுவும் வேலைக்கு ஆகாதாம்.
இளையராஜா பயோபிக் காலதாமதமானால் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்களும் காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது. இந்த படத்தால் புறநானூறு படத்தையும் இப்போது தவற விட்டுவிட்டார் தனுஷ். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் கதாநாயகனாக நடிக்கிறாராம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here