இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். அவர் தற்போது படத்தின் பின்னணி இசை வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார் வெங்கட் பிரபு.

இந்நிலையில் ஸ்டூடியோவில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தன் 2 பேரும் தரையில் உட்கார்ந்திருக்க, யுவன் போன் பேசிகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இவங்க தொல்லை தாங்க முடியல என குறிப்பிட்டு யுவன்சங்கர் தான் அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். யுவன் தற்போது GOAT படம் மட்டுமில்லாமல் விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா திரைப்படத்திற்கும் இசையமைத்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here