த.வெ.க கட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய முக்கிய தீர்மானங்கள்

0
88

நிர்வாகச் சீர்திருத்தம்

1.அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும்.

சாதி, மத மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின் வழிகாட்டும் வழிமுறைகளாகக் கடைப்பிடிக்கப்படும்.

அரசு நிர்வாகம் எப்பொழுதும் முற்போக்குச் சிந்தனையுடனும் அறிவியல் சார்ந்ததாகவும் பன்முகத்தன்மையுடனும் விளங்கும்.

2. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான ‘நடத்தை விதிமுறைகள்’ (con- duct rules) வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும்.

3.அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டது போல. மதுரையில் தலைமைச் செயலகக் கிளை அமைக்கப்படும்.

சமூக நீதி

4.சமூக நீதி, மதச்சார்பின்மைக் கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவக் கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாஸ்ரமக் கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

5.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப் பங்கீடு அளிக்கப்படும். சாதி, மதம் மற்றும் மொழிவழிச் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவச் சூழலை வழங்குவதுடன் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன், இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here