விஜய்யின் கோட் படத்தில் டான்ஸ் போட மறுத்த பிரபல தெலுங்கு நடிகை… காரணம் அஜித் படமா?

0
190
vijay or ajith confuse sreeleela
vijay or ajith confuse sreeleela

vijay or ajith confuse sreeleela : அரசியல் வருகையை அறிவித்து இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் உள்ளிடோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

vijay or ajith confuse sreeleela
vijay or ajith confuse sreeleela

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்து இருக்கும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்தில் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு என்ற பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பெருபாலான விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை.

vijay or ajith confuse sreeleela

இந்நிலையில், இப்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த பாடலில் விஜய்யோடு இணைந்து திரிஷா நடனமாட இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் இந்த பாடலில் ஆட தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலாவைதான் படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நாயகியாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தமிழில் அறிமுக கதாநாயகியாக இருக்கட்டும் என முடிவெடுத்து விஜய் பட வாய்ப்பினை அவர் நிராகரித்துவிட்டாராம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here