விஜயின் அரசியல் அஜித்தை இந்த அளவுக்கு மாத்திடுச்சா? இறங்கி வேலை செய்யும் தல

0
84

தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகளாக இப்போது உள்ளவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். ரஜினி கமல் இவர்கள் இருவர்களுக்கு பிறகு அவர்களுடைய அந்தஸ்தை பெற்றுள்ள நடிகர்களாக அஜித்தும் விஜய்யும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இலட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் படங்கள் ரிலீசானல் அந்த ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான்.

அந்த அளவிற்கு இவர்கள் இருவரையும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் அடுத்ததாக அரசியலை நோக்கி பயணிக்க உள்ளார். அவர் நடித்துவரும் கோட் மற்றும் அவருடைய 69 ஆவது படம் இந்த 2 படங்களுக்குப் பிறகு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியல் பணியில் களம் இறங்குகிறார் விஜய்.

அதனால் சோலோவாக பெர்ஃபார்ம் செய்றதுக்கு அஜித் இப்போது தயாராகி விட்டார். அஜித்தை பொருத்தவரையில் யாரிடமும் தானாக சென்று வாய்ப்பு கேட்பதில்லை. அந்த அளவுக்கு யாரிடமும் ஜெல் ஆவதும் இல்லை. ஆனால் இப்போது அஜித்தின் போக்கே மாறியிருப்பதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்திலும் விடாமுயற்சி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக அவர் சிறுத்தை சிவா உடன் இணைய போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போது வந்த தகவல் படி அஜித் பல இயக்குனர்களிடம் தொலைபேசி மூலம் சந்தித்து படம் பண்ணலாமா என கேட்டு கொண்டிருகிறாராம். அதில் எச் வினோத்திடம் விஜயின் படம் பற்றி கேட்ட பிறகு அந்தப் படம் முடிந்ததும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என சொல்லி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில் இந்த ஒரு வார காலத்திற்குள் அஜித்தும் சங்கரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஷங்கரின் அடுத்த படம் வேள்பாரி என இருக்கும் போது ஒருவேளை அந்த படத்தில் அஜித் இருப்பாரா அல்லது அஜித்தை வைத்து தனியாக சங்கர் படம் பண்ணப்போகிறாரா என்பது குறித்து தெரியவில்லை என கோடம்பாக்கம் வட்டாரத்தில் சொல்லி வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here