What causes dogs to bite their shoes so often : பொதுவாகவே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு செல்லப் பிராணியாக நாய் பார்க்கப்படுகின்றது. உலகில் விசுவாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் உள்ளது என்றால் அது நிச்சயம் நாயாக மட்டும் தான் இருக்க முடியும்.
நமக்கு நாய்கள் மிகவும் பரீட்சையமான பிராணியாக இருப்பினும் நாயிடம் தோன்றும் சில வினோத பழக்கங்களும் மேலும் நாயின் உடல் அமைப்பில் தோன்றும் சில சிறப்பு அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

அந்த வகையில் நாய்கள் அடிக்கடி செருப்பை கடித்து விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கும்.நாய்கள் செய்யும் இந்த செயல்கள் நமக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் நாய்களின் இந்த செயல்களுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக நாய்கள் மனிதனின் ஆடைகளை கடித்து கிழிப்பதற்கும், காலணிகளை கடிப்பதற்கும் காரணம் அது அந்த நபரை நேசிப்பது தான் என விஞ்சானிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் குறிப்பிட்ட நறுமணம் பிடித்ததால் அதை தக்க வைத்து கொள்ளவதற்காகவும், நாய்கள் பிடித்தமாகவர்களை பிரியும் போது உண்டாகும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாததால் இவ்வாறு செருப்பை கடிக்கின்றன.
சில சமயங்களில் கடுமையான பசியின் வெளிப்பாடாகவும் நாய்கள் செருப்புகளை கடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் நாய்கள் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும், அவை அடிக்கடி காலணிகளை கடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.
ஆனால் நாய் குட்டிகள் இது போன்று செயல்களில் ஈடுபடுவது விளையாட்டுக்கானதாகவும் இருக்கலாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here