விஜே மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தனது தந்தை மீதான கோவத்தை கண்ணீருடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மீடியா-வில் வி.ஜே :-
கல்லூரி படிக்கும் போது தொகுபாளினியாக மாறிய விஜே மணிமேகலை 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவர். சன் மியூஸ் தொலைக்காட்சியில் இவரின் மீடியா வாழ்க்கை தொடங்கியது. அதன் அதன் மூலம் பெரும் புகழடைந்தார்.
காதல் வாழ்க்கை:-
ஏழு வருடங்களாக அந்த சேனலிலேயே அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் நடன மாஸ்டர் ஆன ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹுசைனை காதலிக்கும் விஷயத்தை முதல்முறையாக தன்னுடைய தந்தையிடம் தான் மணிமேகலை கூறியிருக்கிறார்.
தந்தை எதிர்ப்பு:-
அதற்கு ஹுசைன் பெயரை கேட்டதும் அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்து திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
காதல் திருமணம் :-
பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்கள் பட்டாலும், இப்போது வீடு, கார், நிலம் என பணக்காரர் ஆக மாறியுள்ளார் வி.ஜே மணிமேகலை.
மணிமேகலை விஜய் டிவியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதில் அதில் இருந்து விலகி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். அந்த நிகழ்ச்சி மேடையில் வைத்து தனக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது, நான் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால், என் அப்பா ஏழு வருடமாக என்னுடன் என்னுடன் பேசுவதில்லை என்று கண்ணீர் விட்டு அழுது பேசி உள்ளார்.
ரசிகர்களின் ஆதரவு:-
இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி விட்டது. அத்துடன் ரசிகர்கள் பலர் வி.ஜே மணிமேகலையை தங்கள் ஆதரவை தெரிவித்த ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ரசிகர்களின் விமர்சனம்:-
மற்றொருபுறம் இது பழைய கதை தான். விஜய் டிவியில் இருக்கும்போதே மணிமேகலை இதே கதையை தான் சொன்னார்கள். இப்போது ஜீ தமிழ் டிவியிலும் இதே தான் சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று ரசிகர்கள் மணிமேகலையை விமர்சித்து வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here