தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவில் கமல்ஹாசன், தனுஷ், விஷால் மற்றும் சிம்பு உள்ளிட்டோர் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் இவர்கள் நால்வர் மீதும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். குறிப்பாக கமல்ஹாசன் மீது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சிம்பு மீது ஐசரி கணேஷ், தனுஷ் மீது தேனாண்டால் முரளி ஆகியோர் புகார் கொடுத்திருந்தனர்.
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இன்றைய செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
விஷால் மீது முந்தைய நிர்வாகத்தில் உண்டான சில பிரச்சனைகளை முன் வைத்து ஒத்துழைப்பு அளிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here