Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகர் விஜய்யின் த.வெ.க கட்சி மாநாட்டிற்கு அனுமதி

விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டை வரும் 23ஆம் தேதி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி…

விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டை வரும் 23ஆம் தேதி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது உட்பட 21 கேள்விகளை காவல்துறை எழுப்பியிருந்தது.

அதற்கு, த.வெ.க கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதனால் விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Advertisements