ஒரே படத்தால் கேள்விக்குறியானது ஹரியின் கேரியர்.. தொடங்கிய ப்ராஜெக்டை நிறுத்திய பெரிய தலக்கட்டு

0
123

கமர்சியல் படங்கள் எடுப்பதில் “கிங்”என்று ஹரியை கூறலாம். ஆனால் ரசிகர்களுக்கு தீனி போடும் ஹரி, கொஞ்ச காலமாக சுவாரஸ்யம் இல்லாத படங்களை தந்து வருகிறார். கதைகள், காட்சிகள் இவற்றை மிக வேகமாக நகர்த்தும் ஹரி தற்சமயம் சோடை போய் கொண்டிருக்கிறார்.

ஒரே மாதிரியான கதைகளை, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஹரி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சுலபமாக கணித்து விடும் மக்கள், இவர் படத்திற்கு ஆர்வம் காட்டுவதை குறைத்து வருகின்றனர். அதனால் ஹரி படத்தின் வியாபாரம் சமீபகாலமாக குறைந்து வருகிறது

ஹரி கடந்த பத்து வருடங்களாக பூஜை, சிங்கம் 3, சாமி ஸ்கொயர், யானை மற்றும் ரத்தினம் ஆகிய ஒரே மாதிரியான கதைகளை கொடுத்து ஏமாற்றி வருகிறார். படத்தில் காட்சிகளுக்கிடையே உள்ள வேகத்தை விட, கதையும் ஆமை வேகத்திலேயே நகன்று செல்கிறது. கமர்சியலாக படம் எடுத்தாலும் சிங்கம் முதல் பாகத்தை தவிர இன்றுவரை சொல்லிக் கொள்ளும் அளவில் எந்த படமும் ஹிட் ஆகவில்லை.

ஆரம்பித்த ப்ராஜெக்டை நிறுத்திய பெரிய தலக்கட்டு

கடைசியாக ஹரி இயக்கிய திரைப்படம் ரத்தினம் . இந்த படத்திற்கு பின், ஹரி சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் செய்வதாக பேசப்பட்டது. அந்த நிறுவனமே ஹரிக்கு வலிய வந்து இந்த வாய்ப்பை அளித்தது. அதனை பெரிய பட்ஜெட் படமாக எடுக்க திட்டமிட்டு இருந்தார் ஹரி

சமீபத்தில் ரத்தினம் படம் போகாததால் ஹரிக்கு பெரும் பின்னடைவு உண்டானது. ஏற்கனவே கமிட்டான சத்தியஜோதி நிறுவனம் ஹரியிடம் பேசுவதும் இல்லையாம். அப்படியே அந்த படத்தை நிறுத்தி விட்டார்களாம். தற்சமயம் ஹரியிடம் எந்த படங்களும் இல்லை.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here