மகளிர் ஆணைய விசாரணையில் நடந்ததை பற்றி நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டாவின் 2வது திருமணம் குறித்த விவகாரத்தை சமீபத்தில் மகளிர் ஆணையம் விசாரணை செய்திருந்தது. அந்த விசாரணையில் ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாலரான ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தை அவரது தான் என்று ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதனை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
தற்போது அந்த பதிவை பற்றி ரங்கராஜ் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ” மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தி புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்.
இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள படி நான் எந்த வாக்கு மூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/DQqdSUMk2QX/?utm_source=ig_web_copy_link
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


