2003ல் தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் அஜீத் நடித்த ஆஞ்சநேயா, விஜய் நடித்த திருமலை இரண்டு படமும் ரிலீஸானது. இதன் கூட பிதாமகன் படமும் ரிலீஸானது.

இதில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வந்த ஆஞ்சநேயா பெரிய வரவேற்பை பெறவில்லை. அதற்கு முன் பவர்புல் போலீஸ் படமான வாஞ்சிநாதன் இயக்கிய ஷாஜி கைலாஸ் இப்படத்தில் அஜீத்தை சரியாக கையாளவில்லை.

ஆனால் இந்த படத்திற்கும் தீபாவளி அன்று அதிகமான கூட்டம் இருந்தது. திருமலை படம் விஜய்க்கு ரமணா இயக்கத்தில் வந்தது. அவருக்கு ஆக்சன் ஹீரோவுக்கான அங்கீகாரத்தை முறையாக பெற்றுக்கொடுத்த படம் இது. அதன் பிறகுதான் இவர் கில்லி, மதுர, திருப்பாச்சி என ஆக்சன் படங்களாக களமிறங்கி தனக்கான பாதையை வகுத்துக்கொண்டார்.

இருப்பினும் இந்த தீபாவளிக்கு களை கட்டியது பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன் திரைப்படம்தான்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here